புதன், 5 ஏப்ரல், 2017

விரைவில் யாரெல்லாம் கைதாவார்கள்? ஹெச்.ராஜா கணிப்பு April 04, 2017

தேச விரோத வழக்கில் வைகோ கைது செய்யப்பட்டது போல், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் கைதாவார் என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கையில், தனித் தமிழீழம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், வைகோவின் பேச்சு தேச விரோதம் என்று எதை வைத்துக் கூறுகிறீர்கள் என்று ஹெச்.ராஜாவின் ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். 

இதற்கு பதிலளிக்கும் விதமாக ஹெச்.ராஜா தெரிவித்துள்ள பதிலில், மற்றொரு நாட்டை இந்தியா எப்படி இரண்டாக பிரிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தேச நலனுக்கு விரோதமான வகையில் பேசிய வைகோவை போல், சீமானும் விரைவில் கைதாவார் என தெரிவித்துள்ளார்.
http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/4/4/2017/who-reported-move-arrest-soon-projection-hraja
 
Vaico is behind bars for anti national speech. Seeman will follow suit

மேலும், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் விரைவில் கைதாவார் என்றும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு துணையாக, ப.சிதம்பரமும் சிறைக்கு செல்வார் என்றும் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதுபோன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே என ஒருவர் ஹெச்.ராஜாவின் ட்விட்டரில் பதிவிட்டதற்கு, செய்வோம் என்றும் மட்டும் அவர் விளக்கமளித்துள்ளார்.
Most probably PC May be arrested in Aircel maxis case. May give company to Vaico

Related Posts: