புதன், 5 ஏப்ரல், 2017

உத்தரபிரதேசத்தில் 36,000 கோடி ரூபாய் விவசாயக் கடன் தள்ளுபடி! April 05, 2017

உத்தரபிரதேசத்தில் 36,000 கோடி ரூபாய் விவசாயக் கடன் தள்ளுபடி!


உத்தரபிரதேசத்தில் சுமார் ஒரு லட்சம் வரை பெறப்பட்ட விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் புதியதாக பொறுப்பேற்றே யோகி ஆதித்யாநாத் தலைமையிலான அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் லக்னோவில் ஏப்ரல் 4ம் தேதி நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தேர்தலின் போது அளித்த வாக்குறுதிபடி, சிறு மற்றும் குறு விவசாயிகள் பெற்ற ஒரு லட்சம் ரூபாய் வரையிலான கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வது என முடிவு செய்யப்பட்டது. 

இதனால், 2 கோடியே 25 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் எனவும், இதற்காக 36 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

தமிழக  விவசாயிகள் தங்களது 7000 கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி டெல்லியில் உறுதியான போராட்டம் நடத்தி வரும் நிலையில், உத்தரபிரதேச மாநில அரசு ரூ.36000 கோடி மதிப்பிலான அம்மாநில விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Related Posts: