வெள்ளி, 7 ஏப்ரல், 2017

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு! April 07, 2017

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!


காவிரியில் தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

காவிரி ஆற்றிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அரசு தொடர்ந்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் நிலவும் வறட்சியை கருத்தில் கொண்டு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தினமும் ஆறாயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இதனை எதிர்த்து கர்நாடக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. மனு மீதான விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித், ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுவை தற்போது விசாரிக்க வேண்டிய சூழல் இல்லை என தெரிவித்தனர். 

இதனிடையே, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சேகர் நாப்டே கோரினார்.இதுதொடர்பாக பின்னர் விசாரிக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள், காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

Related Posts: