ஜி.எஸ்.டி. தொடர்பான 4 துணை மசோதாக்கள், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன், மாநிலங்களவையில் எந்தவித திருத்தமும் இன்றி நேற்று நிறைவேற்றப்பட்டது.
நாடு முழுவதும் ஒரே சீரான வரியை அமல்படுத்தும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய சரக்கு-சேவை வரி மசோதா, ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரி மசோதா, யூனியன் பிரதேச சரக்கு-சேவை வரி மசோதா மற்றும் ஜி.எஸ்.டி.யால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் மசோதா என 4 மசோதாக்களும் சுமார் 8 மணி நேர விவாதத்திற்கு பிறகு திருத்தங்களின்றி வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. இதற்கு காங்கிரஸ் கட்சியும், ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களவையில் இதுதொடர்பாக பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொண்டார். ஜி.எஸ்.டி. மசோதாவில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என கடந்த காலத்தில் வலியுறுத்திய காங்கிரஸ் கட்சி, நேற்றைய வாக்கெடுப்பின் போது மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது.