டெல்லியில் தமிழக விவசாயிகள் கையை அறுத்துக்கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயக்கடன் தள்ளுப்படி, வறட்சி நிவாரணத்தை அதிகரித்து வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 25வது நாளாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மரத்தில் ஏறி போராட்டம், பாம்பு கறி, எலிக்கறி உண்ணும் போராட்டம், பாதி மீசை, தலைமுடி, தாடியை மழித்தல் என தினமும் பல்வேறு நூதன போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.இருந்தும் பிரதமர் மோடி விவசாயிகளை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்கவில்லை.

இந்நிலையில் போராட்டத்தின் அடுத்த வடிவமாக தங்களின் கைகளை பிளேடினால் அறுத்துக்கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர். மோடியின் முகமுடி அணிந்த ஒருவரின் காலில் தங்களின் ரத்ததை ஊற்றிக்கொண்டே தங்களின் கோரிக்கைகளையும் விவசாயிகள் முழங்கி வருகின்றனர்.தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உயிரே போனாலும் போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.