வரலாற்றில் இன்று (ஏப்ரல் 8, 1950) : லியாகத்-நேரு ஒப்பந்தம்:
லியாகத்-நேரு ஒப்பந்தம் அல்லது டெல்லி ஒப்பந்தம் (Delhi Pact) என்பது 1950 ஏப்ரல் 8-ஆம் தேதி இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு, மற்றும் பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான் ஆகியோர், சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பாக ஏற்றுக் கொள்ளப்பட்ட இருதரப்பு உடன்பாடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்தியப் பிரிவினையை அடுத்து, மேலும் பிரிவினைகளையும், கலவரங்களையும் தடுக்கும் பொருட்டு, தொடர்ந்து ஆறு நாட்கள் நடைபெற்ற உச்சக்கட்டப் பேச்சுவார்த்தையையடுத்து இந்த உடன்பாடு எட்டப்பட்டது. இந்த உடன்பாடு எட்டப்பட்டதும் புது டெல்லியில் கையெழுத்திடப்பட்டது.
அகதிகள் எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல் தமது உடைமைகளை விற்க அனுமதிக்கப்படுவது, கடத்தப்பட்டோர் விடுவிக்கப்படுவது, சூறையாடப்பட்ட பொருட்களை மீண்டும் ஒப்படைப்பது, கட்டாய மதமாற்றம் அங்கீகரிக்கப்படாமல் இருப்பது, சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது ஆகியவை முக்கிய உடன்பாடுகளாக இருதரப்புக்கும் இடையே கையெழுத்தானது.