சனி, 8 ஏப்ரல், 2017

மாடுகளை வெட்டவோ, உண்ணவோக் கூடாது என சட்டமியற்றிய ஷியா முஸ்லீம்கள்! April 08, 2017

உ.பி.யில் மாடுகளை கொல்லக்கூடாது என மக்களிடையே பிரச்சாரம் செய்ய ஷியா பிரிவு முஸ்லீம்கள்  இணைந்து ‘ஷியா கவ் ராக்‌ஷ தள்’ எனும் அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

கடந்த புதன் கிழமை அன்று அகில இந்திய ஷியா முஸ்லிம் தனிநபர் சட்டவாரிய அமைப்பின் சார்ப்பாக மாடுகளை கொல்வதற்கு எதிராக ஃபத்வா (மதரீதியிலான தடைவிதிப்பு ) செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து  ‘ஷியா கவ் ராக்‌ஷ தள் ’ எனும் அமைப்பையும் அவர்கள் உருவாக்கியுள்ளனர். லக்னோவில் நடைபெற்ற ஷ்யா பிரிவு முஸ்லீம்கள் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

இதுகுறித்து பேசிய அவ்வமைப்பின் உறுப்பினர் ஒருவர், “மாடுகளை வெட்டுவதற்கான தடை குறித்து ஈராக்கில் இருக்கும் ஷியா பிரிவு மதகுருவான  ‘ஷேக் பஷீர் நஜாஃபி’யிடம் ஆலோசனைகளை கேட்டோம். மாடுகளை வெட்டவோ, உண்ணவோ கூடாது என தெரிவித்த அவர், அதற்கு எதிராக ஃபத்வா விதிக்க அனுமதியளித்துள்ளார்.மேலும், இஸ்லாம் மார்கம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமவுரிமை வழங்கியுள்ளது. எனவே தலாக் முறை தவறாக பயன்படுத்தப்படுவதையும் நாம் தடுக்க வேண்டும். பாபர் மசூதி வழக்கை நீதிமன்றத்துக்கு வெளியில் முடித்துக்கொள்ளுமாறு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதையும் நாங்கள் வரவேற்கிறோம்” என தெரிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானில் மாடுகளை வண்டியில் ஏற்றிச் சென்ற இஸ்லாமியர்கள் மீது ‘பசு பாதுகாப்புப் படையினர்’ நடத்திய கொடூர தாக்குதலில் ஒருவர் உயிரிழிந்தார். இந்நிலையில் இஸ்லாமியர்கள் மாடுகளை வெட்டக்கூடாது என  ‘ஃபத்வா’ விதிக்கப்பட்டிருப்பது மற்ற முஸ்லீம்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது.

Related Posts: