ஈரோடு வீரப்பன் சத்திரம் பெரியவலசுவில், டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு பெரியவலசு நால்ரோட்டிற்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்துபவர்கள் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகமாகி உள்ளது.
மது அருந்திவிட்டு பாட்டில்களை சாலையிலேயே சிலர் வீசி செல்கின்றனர். இதுமட்டுமின்றி, மது போதையில் குடியிருப்பு பகுதியிலும், கடை வளாகத்திலும் குடிமகன்கள் படுத்து கிடக்கின்றனர்.
இதனால் பெண்கள், குழந்தைகள் மிகுந்த வேதனையுடன் உள்ளனர். இந்நிலையில், இந்த மதுபான கடையை அகற்றக்கோரி, பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்தவுடன் கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடேயே பேச்சுவார்த்தை நடத்தினர். 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக இன்ஸ்பெக்டர் உறுதியளித்ததன் அடிப்படையில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.