ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

மதுக்கடையை மூடாவிட்டால் நாளை முதல் போராட்டம்! கும்பகோணம் வணிகர்கள் எச்சரிக்கை! April 09, 2017

மதுக்கடை இல்லாத நகரம் என்ற பெருமையைப் பெற்ற கும்பகோணம் நகரில் மீண்டும் திறக்கப்பட்ட கடையை அகற்றக் கோரி கடையடைப்பு நடத்த வணிகர்கள் முடிவெடுத்துள்ளனர்.    

நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த மதுக்கடைகளை அகற்றும் நடவடிக்கையின் காரணமாக கும்பகோணம் நகரில் செயல்பட்டுவந்த  23 அரசு மதுபானக்கடைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. இதையடுத்து, மதுக்கடைகள் இல்லா நகரம் என்ற பெருமையை கும்பகோணம் பெற்றது. இந்நிலையில், நேற்று புதிதாக ஒரு மதுபானக் கடையை அதிகாரிகள் திறந்தனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்துவது குறித்து முடிவெடுக்க வணிகர்கள் கூட்டம் நடைபெற்றது. உடனடியாக மதுபானக் கடையை மூடாவிட்டால் நாளை முதல் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்துக்கு ஏராளமான பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

Related Posts: