திங்கள், 10 ஏப்ரல், 2017

ஜம்மு காஷ்மீர் இடைத்தேர்தலில் வரலாறு காணாத மந்தமான வாக்குப்பதிவு! April 09, 2017

ஜம்மு காஷ்மீர் இடைத்தேர்தலில் வரலாறு காணாத மந்தமான வாக்குப்பதிவு!


ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக 3 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த மக்களவைத் தொகுதியை உள்ளடக்கிய ஸ்ரீநகர், பத்காம் மற்றும் கந்தர்பால் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் சில நாட்களுக்கு முன் போலீஸ் மீது மர்ம நபர்கள் சிலர் கல் எறிந்து தாக்குதல் நடத்தினர். மேலும், ஒரு பள்ளிக்கூடம் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இதனிடையே, தீவிரவாத அச்சுறுத்தலை கருத்தில் கொண்டும் இடைத்தேர்தல் நடைபெறும் ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவில் இருந்து இணைய சேவை முடக்கப்பட்டுள்ள நிலையில், வாக்குப்பதிவு முடிந்த உடனேயே இணைய சேவை மீண்டும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தலில் மந்தமான வாக்குப்பதிவு நடைபெற்றது. வரலாறு காணாத வகையில், வெறும் 6.5 சதவீத வாக்குகளே பதிவாகின

Related Posts: