திங்கள், 10 ஏப்ரல், 2017

டெல்லியில் பிரதமர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் நிர்வாண போராட்டம்! April 10, 2017




டெல்லியில் பிரதமர் அலுவலகம் முன் தமிழக விவசாயிகள் இன்று திடீரென நிர்வாண போராட்டம் நடத்தினர். 

டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் இன்று 28வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் பிரதமரை சந்திக்க அழைத்துச் செல்வதாக கூறி தமிழக விவசாயிகளை காவலர்கள் அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு சென்ற பிறகு பிரதமரை சந்திக்க இயலாது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் தங்கள் ஆடைகளை களைந்து நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம்  பேசிய விவசாய சங்க கூட்டியக்கத்தின் தலைவர் அய்யாக்கண்னு பிரதமர் தங்களை சந்திக்காமல் ஏமாற்றியதால் நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். 

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் பின்னர் ஜந்தர் மந்தரில் இறக்கிவிடப்பட்டனர்.

Related Posts: