செவ்வாய், 11 ஏப்ரல், 2017

தமிழகத்திற்கு நீர் திறக்க முடியாது என கர்நாடக அரசு அறிவிப்பு! April 11, 2017

தமிழகத்திற்கு நீர் திறக்க முடியாது என கர்நாடக அரசு அறிவிப்பு!


கர்நாடகா அணைகளில் போதிய அளவிற்கு நீர் கையிருப்பு இல்லாததால் தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்தவிட முடியாது என கர்நாடக அரசு கூறியுள்ளது.

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில நீர்பாசானத்துறை அமைச்சர் எம்.பி.பட்டீல் கர்நாடக அணைகளில் தற்போது உள்ள நீர் ஜூன் 15ந்தேதி வரை மாநிலத்தின் குடிநீர் தேவையை சமாளிக்கும் அளவிற்கு மட்டுமே உள்ளதாகக் கூறினார். 

போதிய அளவிற்கு தண்ணீர் இல்லாததால் கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளிலிருந்து தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட தற்போதைய சூழலில் வாய்ப்பு இல்லை என்று கூறிய எம்.பி.பட்டீல் மேகதாதுவில் அணை கட்டுவது கர்நாடகத்திற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் நல்லது என தெரிவித்தார். 

Related Posts: