தஞ்சாவூரில் 14வது நாளாக நடைபெற்ற காவிரி காப்பு போராட்டத்தில், பசு ஒன்று பிரதமரிடம் நீர்கேட்டு மனு கொடுப்பது போலவும், பிரதமர் கண்டுகொள்ளாமல் வணங்குவது போலவும் சித்தரித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
காவிரி தீர்ப்பாயத்தை கலைக்கக் கூடாது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவிரி உரிமை மீட்பு குழுவினர் 14வது நாளாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக மாணவர்கள் தினந்தோறும் பல்வேறு சித்தரிப்பு நாடகங்கள் நடத்தி வருகின்றனர். இன்று நடத்திய நாடகத்தில் வறட்சியால் பசுமாடு ஒன்று பிரதமரிடம் நீர்கேட்டு மனு கொடுப்பது போலவும், பிரதமர் அதனை கண்டுகொள்ளாமல் பசுவை வணங்குவது போலவும் நடைபெற்றது. இது அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக அமைந்தது.