ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். அமைப்பினரை குறிவைத்து அணுசக்தியற்ற மிகப்பெரிய குண்டு வீசி அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் ஆசின் மாவட்டத்தில் ஐ.எஸ் அமைப்பினர் அதிகம் வசிக்கக்கூடிய பகுதியான ‘நங்கர்ஹார்’ பகுதியில் மிகப்பெரிய வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளனர்.‘குண்டுகளின் அன்னை ’ என விவரிக்கப்படும் சுமார் 21,000 பவுன்ட் எடையுள்ள ‘MOAB’ எனப்படும் சக்திவாய்ந்த குண்டை இரவு சுமார் 7.30 மணியளவில் ஆப்கானிஸ்தான் மேல் வீசப்பட்டுள்ளது. ஈராக் போரின் போது உருவாக்கப்பட்ட இந்த வெடிகுண்டை முதன்முறையாக அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது. எனினும் இது அணுகுண்டு அல்ல அமெரிக்க ராணுவ தலைமைச் செயலகமான பெண்டகன் தெரிவித்துள்ளது.
ஐ.எஸ். அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் சுரங்கங்கள், அவர்கள் பதுங்கி வாழ பயன்படுத்தப்படும் குகைகள் உள்ளிட்டவற்றை குறிவைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலில் மிகப்பெரிய உயிர்சேதம் ஏற்பட்டிருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தீவிரவாதிகள் மட்டுமல்லாது அப்பாவி மக்களும் இத்தாக்குதலில் உயிரிழந்திருக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
ஐ.எஸ் அமைப்பினருக்கும் அமெரிக்காவும் இடையில் நடந்துவரும் கடும் சண்டையில் அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் கடந்த சனிக்கிழமையன்று கொல்லப்பட்டார். இந்நிலையில் அமெரிக்க ராணுவத்தின் இத்தாக்குதல் ஆப்கானிஸ்தானில் வாழும் அப்பாவி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.