ஜட்ஜு சொல்றதயெல்லாம் நாங்க கேக்க மாட்டோம்” நள்ளிரவில் நட்டாந்தரையில் உறங்கிக் கொண்டிருக்கும் விவசாயிகளை வெளியே போகச் சொல்லும் அராஜக ஆவடி போலிசார்!- அதிர்ச்சி தரும் நேரடி வீடியோ
உங்களுக்கெல்லாம் ஈவு இரக்கமே இல்லையா , போலீசுடன் போராடும் இளைஞர்கள்!
இந்த நேரத்தில் அவர்களை போகச் சொல்கின்றீர்களே அவர்கள் எங்கே போவார்கள் ? உங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா ? விடிய விடிய நைட்ல கிளப்பில் கும்மாலம் போடுவதற்கு அனுமதி கொடுப்பீர்கள் , தனியார் இடத்தில் உறங்க விவசாயிகளுக்கு அனுமதி இல்லையா ? யாருய்யா ஆட்சி நடத்தரது தமிழகத்தில் ஹிட்லரின் அண்ணன் தம்பிகளா ? என இளைஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
டெல்லியில் 24 நாட்களாக தமிழக விவசாயிகள் ரோட்டில் தான் போராடி வருகின்றார்கள். ஆனால் அந்த மாநில முதல்வர் அவர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை மாறாக ஆதரவு அளித்து வருவது குறிப்பிடதக்கது!