தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
தொடர்ந்து அதே பகுதியில் நிலை கொண்டு இருப்பதால், அடுத்த 2 நாட்களில் புயல் சின்னமாக மாறும் வாய்ப்பு உள்ளது. இதனால் நாகை மற்றும் பாம்பன் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை, கடல் பகுதியிலேயே நிலை கொண்டு இருப்பதால் தரைப்பகுதியில், உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, வெப்பத்தை அதிகரிக்க வைக்கும்.
இதன் காரணமாக வட தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் மற்றும் தெலுங்கான மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மழையாக பொழிந்து, மக்களின் வயிற்றில் பால் வார்க்குமா? அல்லது இருக்கும் வெப்பத்தை அதிகமாக்கி விடுமா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.