சனி, 15 ஏப்ரல், 2017

ஆத்திரமூட்ட வேண்டாம்: அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை...

கொரியப் பிராந்தியத்தில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ள வேண்டாம் என்றும், தங்கள் மீது தாக்குதல் நடத்தினால் தாங்களும் அணுஆயுதத் தாக்குதல் நடத்தத் தயார் என்றும் வடகொரியா எச்சரித்துள்ளது.
வடகொரியாவை நிறுவிய அதிபர் கிம் இல்-சொங்கின் 105வது பிறந்த நாள் நினைவு கொண்டாட்டங்கள் அங்கு வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, தலைநகர் பியாங்யோங்கில் வடகொரிய ராணுவத்தின் பலத்தைப் பறைசாற்றும் விதத்தில் பிரம்மாண்டமான அணிவகுப்பு நடைபெற்றது.
இந்நிலையில் வடகொரிய ராணுவ அதிகாரி சோய ரொங் ஹெய, வடகொரியா மீது முழுமையானதொரு போர் தொடுக்கப்பட்டால், திருப்பி தாக்கத் தயாராக இருக்கிறோம். அணு ஆயுத தாக்குதலுக்கு எதிராக எங்களுடைய பாணியில் அணு ஆயுத தாக்குதல் நடத்தி பதிலடி வழங்குவோம் என்று கூறியுள்ளார்.

Related Posts: