பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு மீண்டும் வங்கி ஏடிஎம்.களில் பணம் எடுப்பது பிப்ரவரி மாதம் அதிகரித்துள்ளதாகவும் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஜனவரியில் ஏடிஎம்களிலிருந்து எடுக்கப்பட்ட ரொக்கம் ரூ. 1.52 லட்சம் கோடி என்றால் பிப்ரவரியில் ரூ.1.93 லட்சம் கோடி என்கிறது ஆர்பிஐ. அதாவது இப்படியே போனால் பணமதிப்பு நீக்கத்துக்கு முன்பிருந்த ரொக்கப் பரிவர்த்தனை மட்டத்திற்கு செல்லும் என்கிறது ஆர்பிஐ.
பணமதிப்பாக்கம் மறுபடியும் விரைவுகதியில் நடைபெற்று வருவதால் பிப்ரவரியில் மீண்டும் ரொக்கப் பரிமாற்றங்கள் அதிகமாகி டிஜிட்டல் பரிமாற்றங்கள் குறைந்துள்ளன என்கிறது ஆர்பிஐ தரவுகள். மார்ச் 31-ஆம் தேதி மொத்த பணசுழற்சி ரூ.13.32 லட்சம் கோடி. அதாவது நவம்பர் 8-க்கு முன்பாக இது ரூ.17.97 லட்சம் கோடியாக இருந்ததாகவும், தற்போது இதில் 76% எட்டப்பட்டுள்ளதாகவும் ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது. எனவே மீண்டும் பணப் புழக்கம் என்பது பணமதிப்பு நீக்கத்திற்கு முந்தைய நிலையை அடையும் என்று ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.
பதிவு செய்த நாள் : April 12, 2017 - 09:36 AM