சவுதி அரேபியாவில் சட்டவிரோமாக தங்கியுள்ள இந்தியர்கள் வெளியேறுவதற்கான பொதுமன்னிப்பு விண்ணப்பம் தலைநகர் ரியாத்தில் 5-வது நாளாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் இதுவரை விண்ணப்பித்தவர்களில், 60 சதவிகிதம் பேர் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என சவுதி அரேபியாவுக்கான இந்தியத் தூதர் அகமது ஜாவேத் தெரிவித்துள்ளார். விண்ணப்பித்தவர்களில், தெலங்கானா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தலா 10 சதவீதம் பேர் என தெரியவந்துள்ளது.
விண்ணப்ப படிவங்களை நிரப்புவோருக்கு, உதவி செய்யும் தன்னார்வ ஊழியர்கள் அதிகம் முன் வரவேண்டும் எனவும் அகமது ஜாவேத் கேட்டுக் கொண்டார்.
பதிவு செய்த நாள் : April 03, 2017 - 04:57 PM