திங்கள், 17 ஏப்ரல், 2017

பெப்சியின் கேடித்தனம் !! பெயர் மாற்றி விற்பனை : “கெத்து” னு வருது மக்களே உஷார்..! – அதிர்ச்சி ரிப்போர்ட் !!

தமிழில் எழுதினால் தமிழக பானம் என நினைத்து தமிழக மக்கள் வாங்கி குடித்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் பெப்சி “கெத்து” னு வருது மக்களே.
ஜல்லிக்கட்டு போட்டியை மீட்டெடுக்கும் போராட்டத்தின் அங்கமாக பெப்சி, கோக் உள்ளிட்ட பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களின் சுரண்டலை எதிர்த்தும் இளைஞர்கள் குரல் கொடுத்தனர்.
இதன் எதிரொலியாக நம் தண்ணீரை எடுத்து நம்மிடமே அதிக லாபத்திற்கு விற்கும் அந்நிறுவனங்களின் குளிர்பானங்களை விற்கப்போவதில்லை என்று வணிகர் சங்கங்கள் அறிவித்தன.
இதனால், இப்போது இளநீர் மற்றும் பன்னீர் சோடாவின் விற்பனையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பெப்சி நிறுவனம் தனது தில்லாலங்கடி வேலையை காட்ட ஆரம்பித்திருக்கிறது.
பெப்சி என்ற பெயலை ‘கெத்து’ என்று தமிழில் மாற்றி விற்பனைசெய்யத் தொடங்கியுள்ளது. சூப்பர் மார்க்கெட்டுக்களில் இவை அதிகம் விற்பனைக்கு உள்ளன.
இந்த புதுப்பெயர் கொண்ட பெப்சி பாட்டில்களில் அந்நிறுவனத்தின் அடையாளம் அதிகம் தெரியாதபடி, லோகோவை கூட சிறியதாக ஓரத்தில் போட்டிருக்கிறது.
பெயரை மாற்றினால் தமிழர்களை ஏமாற்றி விடலாம் என்று குறுக்குவழியில் செல்லும் பெப்சியை மக்கள் இன்னும் கடுமையாக புறக்கணிக்க வேண்டும் என்றும் அவற்றை விற்பனை செய்யும் கடைகளில் பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் உடனடி எதிர்க்குரல் கொடுக்கத் ஆரம்பித்துள்ளனர்.

Related Posts: