வியாழன், 20 ஏப்ரல், 2017

உண்மை வெளிவந்தது !!

அதிமுகவின் இரண்டு அணிகளின் இணைப்பு முயற்சி ஒரே நாளில் திசை திரும்புவதாக தெரிகிறது.
சசிகலா குடும்பம் ஓரங்கட்டப்பட்டிருப்பது தனது தர்ம யுத்தத்தின் முதல் வெற்றி என்று ஓபிஎஸ் கூறினார். ஊடகங்களும் ஓபிஎஸ் தனது குறிக்கோளில் வெற்றி பெற்றுவிட்டதாக பாராட்டின.
ஆனால், ஓபிஎஸ் நிபந்தனைக்காக சசிகலா குடும்பத்தை ஓரங்கட்டவில்லை என்று எடப்பாடி அணியினர் கூறுகிறார்கள். ஓபிஎஸ்சுக்கு இந்தப் பெருமை போய்விடக்கூடாது என்பதில் அவர்கள் அக்கறையாக இருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, முதல்வர் பதவி ஓபிஎஸ்சுக்கு தரப்படுமா என்ற கேள்விக்கும் எடப்பாடி அணியினர் கிண்டலாகத்தான் பதில் சொல்லியிருக்கிறார்கள்.
122 எம்எல்ஏக்களின் ஆதரவோடு முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி ஏன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும்? அவரே தொடர்ந்து முதல்வராக இருப்பார் என்று தம்பிதுரை திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.
மேலும் சசிகலா பொதுச்செயலாளர் ஆவதற்கு ஓபிஎஸ்சும் ஆதரவு கொடுத்தவர்தான் என்றும் தம்பிதுரை நக்கலாக பதில் சொல்லியிருக்கிறார்.
தம்பிதுரை, ஜெயக்குமார் உள்ளிட்ட எடப்பாடி அணியின் முக்கிய தலைவர்கள் கூறுவதைப் பார்க்கும்போது சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்கும் முடிவு ஓபிஎஸ்சுடன் இணைவதற்காக மட்டும் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக தெரியவில்லை.
சசிகலாவை குறிப்பிடும்போது தம்பிதுரை இன்னமும் சின்னம்மா என்றுதான் சொல்லுகிறார். எனவே, இது சசிகலாவை விலக்கி வைத்து ஜெயலலிதா எடுத்த நடவடிக்கை போல கண்துடைப்பு நாடகமாகத்தான் தோன்றுகிறது.
சசிகலா குடும்பத்தினரின் நேரடி ஆதிக்கம் தங்களுடைய அணிக்கு தொண்டர்களின் ஆதரவை பாதிக்கிறது என்ற உண்மை புரிந்ததால் எடப்பாடி அணியினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
சசிகலா குடும்பத்தையும் அவர்களுடைய ஆதிக்கத்தையும் குறைகூறித்தான் ஓபிஎஸ் அரசியல் நடத்துகிறார். அவருடைய முக்கியமான ஆயுதத்தை பறித்துவிட்டால் அதிருப்தியில் உள்ள அதிமுக தொண்டர்களை தங்கள் பக்கம் இழுக்கமுடியும் என்று எடப்பாடி அணியினர் நினைக்கிறார்கள்.
கட்சியிலும் ஆட்சியிலும் நேரடியாக பங்கேற்காவிட்டாலும் சசிகலா குடும்பத்தினர் அவர்களுக்கு தேவையான காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள எந்த தடையும் இருக்காது என்று விபரம் அறிந்தோர் கூறுகிறார்கள்.
மொத்தத்தில் இந்த இணைப்பு முயற்சி ஓபிஎஸ் மற்றும் அவருடைய அணியினரின் பதவி மோகத்தை அம்பலப்படுத்த நடைபெற்ற நாடகம் என்றே நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள்.

Related Posts:

  • பேராசை என்றால் என்ன? பேராசை என்றால் என்ன? ஆசைக்கும், பேராசைக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அதிகமான பணத்தை விரும்புவதுதான் பேராசை என்று பலரும் … Read More
  • யாசிக்கக் கூடாது யாசிக்கக் கூடாது 1472 – وحَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَي… Read More
  • வறுமையிலும் செம்மையாக வாழ வறுமையும், வசதிகளும் சோதனைதான் ஒருவருக்கு இறைவன் பொருள் வசதியைக் கொடுத்தால் அவரை அதன் மூலம் சோதித்துப் பார்க்கிறான். அதுபோல் ஒருவருக்கு வறுமையை அல்… Read More
  • கடன் வாங்க வேண்டாம் கடன் விஷயத்தில் கண்டிப்பு கடன் வாங்குவது, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவது ஆகியவற்றில் இஸ்லாம் கடுமையான நிலைபாட்டைக் கொண்டுள்ளது. 2295 – … Read More
  • Sleeping is Important Read More