முல்லை பெரியார் அணை நான்காவது முறையாக 142 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக இப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தற்போது முல்லை பெரியார் அணையின் நீர்வரத்து 3 ஆயிரத்து 36 கனஅடியாக அதிகரித்து 142 அடியை எட்டியது.
மேலும் அணையின் நீர்மட்டம் படிபடியாக உயர்ந்து வருவதால் மதுரை மாவட்ட முதல்போக பாசனத்திற்காகவும் குடிநீர்தேவைக்காகவும் ஆயிரத்து 700 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.