நாட்டில் வருடத்திற்கு ஒரு கோடிக்கு மேல் வருமானம் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 4 ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளது.
ஆண்டு வருமானம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உள்ள நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் எண்ணிக்கை கடந்த 2014-2015ம் நிதி ஆண்டில் 88 ஆயிரத்து 649 ஆக இருந்ததாகக் கூறியுள்ள மத்திய நேரடி வரிகள் வாரியம், இந்த எண்ணிக்கை 2017- 2018 நிதி ஆண்டில் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 139ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
தனி நபர் வருமான வரி பிரிவில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானத்தை கணக்கில் காட்டுபவர்களின் எண்ணிக்கை இதே கால கட்டத்தில் 48 ஆயிரத்து 416லிருந்து 81 ஆயிரத்து 344ஆக உயர்ந்துள்ளது.
ஆண்டு வருமானம் ஒரு கோடி ரூபாய்க்கு தனி நபர் வருமானம் கெண்டுள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 68 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.
வருமானவரி கணக்கு தாக்கல்களின் எண்ணிக்கை கடந்த கடந்த 4 நிதி ஆண்டுகளில் 80 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளதாக கூறியுள்ள மத்திய நேரடி வரிகள் வாரியம், 2017-18ம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 6 கோடியே 85 லட்ச ரூபாயாக இருந்ததாக கூறியுள்ளது.