செவ்வாய், 5 செப்டம்பர், 2017

தமிழகம் முழுவதும் வலுக்கும் மாணவர்கள் போராட்டம் September 05, 2017

தமிழகம் முழுவதும் வலுக்கும் மாணவர்கள் போராட்டம்


மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை லொயோலா கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரி வளாகத்திற்கு முன் மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர் இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வில் நிரந்தர விலக்கு அளிக்க கோரியும் மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திரைப்பட இயக்குநர் கவுதமன், இனி தங்கள் உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம் என தெரிவித்தார்.

இதேபோல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாணவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 15 மாணவர் அமைப்புகளை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர். அப்போது மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான கண்டன முழக்கங்கள் எழுப்பட்டன. இதை தொடர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட முயன்ற மாணவர்களை காவல்துறையினர் குண்டுகட்டாக கைது செய்தனர்.