உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரை தொடர்ந்து, ஃபருகாபாத் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கடந்த 1 மாதத்தில் 49 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கோரக்பூரில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கடந்த மாதம் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தன.
இந்த துயர சம்பவத்திலிருந்து நாடு மீளாத நிலையில், ஃபருகாபாத் பகுதியில் உல்ல ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் பிறந்த 49 குழந்தைகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தலைமை மருத்துவ அதிகாரி, தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது