திங்கள், 4 செப்டம்பர், 2017

தமிழக இடஒதுக்கீடுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு! September 04, 2017

​தமிழக இடஒதுக்கீடுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!



தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிராக நாகர்கோயிலை சேர்ந்த மாணவி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. யாரையும் பாதிக்காத வகையில், அனைத்து தரப்பினருக்கும் இடம் கிடைக்கும் வகையில் இந்த இடஒதுக்கீடு முறை தொடர்ந்து நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலை சேர்ந்த மாணவி உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில் தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறை உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்றும், இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.