சனி, 2 செப்டம்பர், 2017

திடீர் ஆய்வு நடத்திப் போலி மருத்துவரைக் கண்டுபிடித்த சேலம் ஆட்சியர்! September 02, 2017



திடீர் ஆய்வு நடத்திப் போலி மருத்துவரைக் கண்டுபிடித்த சேலம் ஆட்சியர்!
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் ஆட்சியர் ரோகிணி திடீர் ஆய்வு நடத்திப் போலி மருத்துவரைக் கண்டுபிடித்தார்.

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பேருந்து நிலையம் அருகே மருந்துக் கடையில் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து மருந்துகள் கொடுத்ததுடன் ஊசியும் போட்டு வருவது மாவட்ட ஆட்சியருக்குத் தெரியவந்தது.

இந்நிலையில் அங்கு வந்த ஆட்சியர் ரோகிணி திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது போலி மருத்துவம் பார்த்து வந்தவரைக் கையும் களவுமாகப் பிடித்துக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். போலி மருத்துவர் மருத்துவம் பார்த்த இடம் மற்றும் மருந்துக் கடைக்கும் பூட்டுப் போட்டு சீல் வைத்தார்.

அரியலூர் மாவட்டம் குழுமூரில் மாணவி அனிதாவின் உடலுக்கு டிடிவி தினகரன் அஞ்சலி!

Related Posts: