திருச்சி மலைக்கோட்டை அருகே 3 மாடிக் கட்டடம் இடிந்த விபத்தில் 5 வயது சிறுவன் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சறுக்குப் பாறை பகுதியில் அதிகாலை நாலரை மணியளவில் கட்டடம் இடிந்த நிலையில், உறங்கிக் கொண்டிருந்தவர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். 10க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், மீட்கப்பட்ட 5 பேரில் 6 வயது சிறுவன் ஹரிஷ் மற்றும் அவனது தந்தை கார்த்திக் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
வீடு இடிந்த இடத்தில் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அருண்,மாநகராட்சி ஆணையர் ரவிச் சந்திரன் மற்றும் அதிகாரிகள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை டீன் அனிதா தலைமையில் மீட்கப்படுபவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.