ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக முயற்சிக்கும்: தம்பிதுரை September 03, 2017

நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக முயற்சிக்கும்: தம்பிதுரை


நீட் தேர்வுக்கு எதிராக இருக்கும் மாநிலங்களை ஒன்றிணைத்து, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக முயற்சிக்கும் என, அக்கட்சியின் எம்பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உச்சநீதிமன்ற உத்தரவின் பேரிலேயே மருத்துவச் சேர்க்கை நடைபெறுவதாகவும், நீட் தேர்வை அதிமுக தற்போது வரை எதிர்ப்பதாகவும் கூறினார். மாணவி அனிதாவின் மரணம் வருந்தத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார். 

நீட் போன்ற போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், மாணவர்களை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தம்பிதுரை தெரிவித்தார். அத்துடன், நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை ஒன்றிணைத்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவும் முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் தம்பிதுரை கூறினார்.

Related Posts: