வியாழன், 7 செப்டம்பர், 2017

மலைப்பகுதியில், வெளிப்படையாகவே கள்ளச் சாராயம் காய்ச்சுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி..!! September 06, 2017

​மலைப்பகுதியில், வெளிப்படையாகவே கள்ளச் சாராயம் காய்ச்சுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி..!!


ஆத்தூர் அருகே கல்வராயன் மலைப்பகுதியில், வெளிப்படையாகவே கள்ளச் சாராயம் காய்ச்சும் பணியில் பலர் ஈடுபட்டுள்ள சம்பவம், பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  

சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சமீபத்தில் நெடுஞ்சாலையோரம் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில், பல மலை கிராமங்கள் கள்ளச்சாராய உற்பத்தி மையங்களாக மாறியுள்ளன. 

மன்னூர், நாவலூர், பட்டிவளவு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள், வனத்துறைக்கு சொந்தமான பகுதிகளில், வெளிப்படையாகவே கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிலை செய்து வருகின்றனர். 

இந்த கள்ளச்சாராயம் லாரி டியூப்கள் மூலமாக மலையடிவார  பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ஆத்தூர், தலைவாசல், சிறுவாச்சூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்துக்கும் கொண்டு செல்லப்படுகிறது. 

ஒரு பாக்கெட் சாராயம் 50 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டிய மதுவிலக்கு போலீசார், சாராய வியாபாரிகளுக்கு உடந்தையாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. 

கள்ளச்சாராய விற்பனை தடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts: