வியாழன், 7 செப்டம்பர், 2017

நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த சி.எம்.சி. கல்லூரி மறுப்பு! September 06, 2017




நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த சி.எம்.சி. கல்லூரி மறுப்பு!
நீட் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கை தங்களின் நிர்வாக முறைக்கு எதிராக இருப்பதாக கூறி, மருத்துவ மாணவர் சேர்க்கையை வேலூர் சி.எம்.சி. (CMC) மருத்துவக் கல்லூரி நிறுத்தி வைத்துள்ளது. 

எம்.பி.பி.எஸ். படிப்பில் ஒரே ஒரு மாணவரையும், மருத்துவ மேற்படிப்பில் ஒரே ஒரு மாணவரையும் மட்டுமே சி.எம்.சி. நிர்வாகம் சேர்த்துள்ளது. இதன் காரணமாக எம்.பி.பி.எஸ். படிப்புக்கான 99 இடங்களும், மருத்துவ உயர்கல்விக்கான 59 இடங்களும் காலியாக உள்ளன. 

சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள், 5 ஆண்டு படிப்பை நிறைவு செய்தவுடன், சி.எம்.சி. மருத்துவக் கல்லூரிக்கு கீழ் உள்ள மருத்துவமனைகளில் 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. 

ஆனால், தற்போது நீட் அறிமுகம் செய்யப்பட்டதன் காரணமாக, நிர்வாக முறையின் கீழ் மருத்துவ மானவர் சேர்க்கையை நடத்த முடியாது என்பதால், இந்த முடிவை எடுத்ததாக சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Related Posts: