ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

இனவெறிக்கு பலியாகும் ரோகிங்கியா மக்கள்..! September 09, 2017

இனவெறிக்கு பலியாகும் ரோகிங்கியா மக்கள்..!


மியான்மரில் இருந்து வங்கதேசத்துக்கு இரண்டு வாரங்களில் ரோகிங்கிய அகதிகள் இரண்டு லட்சத்து எழுபதாயிரம் பேர் புலம்பெயர்ந்துள்ளனர். 

மியான்மரின் ராகினி மாநிலத்தில் ரோகிங்கிய முஸ்லிம்கள் லட்சக்கணக்கானோர் வாழ்ந்து வருகின்றனர். மியான்மரை சொந்த தேசமாகக்கொண்ட இவர்களை வங்கதேசத்தில் இருந்து குடிபெயர்ந்து சட்டவிரோதமாக மியான்மரில் தங்கியுள்ளதாகக் கூறி இவர்களுக்குக் குடியுரிமை வழங்க மியான்மர் அரசு மறுத்து வருகிறது. மேலும், ரோகிங்கிய முஸ்லீம்கள் மீது பவுத்தர்கள் கொடூர இனவெறி தாக்குதல்களை நடத்திவருகிறனர். பவுத்தர்களின் இனவெறிக்கு இதுவரை ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். குழந்தைகளை உயிருடன் கொளுத்தம் அவலங்கள் தினம்தோறும் நடந்துவருகின்றன.

இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன் ரோகிங்கியர்கள், மியான்மர் ராணுவத்தினர் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இதற்குப் பழிதீர்க்கும் வகையில் ராணுவத்தினர் நடத்திய கொடூர தாக்குதலில் ரோகிங்கிய முஸ்லிம்கள் 400பேர் கொல்லப்பட்டனர். வன்முறை, தீவைப்பு, பாலியல் பலாத்காரம் எனப் பலமுனைத் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் ராகினியில் இருந்து ஏராளமான முஸ்லிம்கள் வங்கதேசத்துக்குப் புலம்பெயர்ந்து வருகின்றனர். 

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 2 லட்சத்து எழுபதாயிரம் பேர் இவ்வாறு புலம்பெயர்ந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ராணுவத்தினரும் பவுத்தர்களும் சேர்ந்து தங்கள் வீடுகளைத் தீவைத்துக் கொளுத்துவதாகவும், ஆட்களைக் கண்டால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்வதாகவும் அங்கிருந்து தப்பி வந்த ரோகிங்கிய அகதியான இத்ரிஸ் உருக்கமுடன் தெரிவித்தார்.

Related Posts: