ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் அதிரடி September 10, 2017

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் அதிரடி


டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரி மாணவர் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 

இந்த தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. ஐக்கிய இடதுசாரி கூட்டணி சார்பில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட கீதா குமாரி, துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சைமன் ஜோயா கான், பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட துக்கிராலா ஸ்ரீகிரிஷா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். 

வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கீதா குமாரி, ஜனநாயகத்தின் மதிப்பை உணர்த்தும் வகையில் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளதாகக் கூறினார். ஏபிவிபி அமைப்பின் சர்வாதிகார ஆதரவு நிலைப்பாடு குறித்து மாணவர்கள் புரிந்து கொண்டு வாக்களித்துள்ளனர் என்பது இதன் மூலம் தெரிய வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

Related Posts: