ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு September 10, 2017

வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்ப சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், வெப்ப நிலை அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸூம், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸூம் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts: