ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு சட்டம் 35A-வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரிவினையின்போது மேற்கு பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் ஜம்மு காஷ்மீருக்குள் வந்து தங்கியவர்களின் சார்பில் காளிதாஸ், சஞ்சய் குமார் உள்ளிட்ட 3 பேர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
அதில், நாடு பிரிவினையை சந்தித்த 1947ம் ஆண்டு, மேற்கு பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் ஜம்மு காஷ்மீருக்குள் வந்து தாங்கள் தங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். தற்போது 3 லட்சம் பேர் ஜம்மு காஷ்மீரில் தங்கியுள்ள நிலையில், தாங்கள் ஜம்மு காஷ்மீரின் பூர்வீக மக்கள் இல்லை என்று கூறி அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாக அவர்கள் தங்கள் மனுவில் கூறியுள்ளனர்.
60 ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகளாகவே தாங்கள் வாழ்ந்து வருவதாகவும், 35A சட்டப்பிரிவை காரணம் காட்டி நிலம் வாங்க அனுமதி மறுக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இட ஒதுக்கீட்டின் பயன், அரசுப் பணி, தேர்தலில் போட்டியிடுவதற்கான உரிமை உள்ளிட்டவையும் மறுக்கப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கு தீபாவளிக்குப் பிறகு விசாரணைக்கு வர உள்ள நிலையில், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.