பிரதமர் மோடி அரசாங்கத்தின் 'தூய்மை இந்தியா' மற்றும் 'மேக் இன் இந்தியா' திட்டங்களுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இரண்டு வார சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ராகுல்காந்தி, கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள பெர்கெலி பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் இன்று உரையாடினார்.
இந்தியாவில் நிலவும் அரசியல் சூழ்நிலை, பிரதமர் மோடி, இந்திய அரசின் திட்டங்கள், வாரிசு அரசியல், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்த மாணவர்களின் கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளித்தார்.
மோடிக்கு புகழாரம்:
பிரதமர் மோடியின் சிறந்த குணாசியங்கள் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த ராகுல், தான் ஒரு எதிர்கட்சித் தலைவர் என்றாலும் கூட மோடி எனக்கும் பிரதமரே, அவரிடம் சில நல்ல பண்புகள் உள்ளன, மோடி தன்னை விட சிறந்த ஒரு பரப்புரையாளர் ஆவார் என்றார்.
மோடி அரசின் சிறந்த திட்டங்கள்:
மத்திய அரசின் திட்டங்கள் குறித்த கேள்விக்கு, மோடி அரசின் தூய்மை இந்தியா, மற்றும் மேக் இன் இந்தியா திட்டங்கள் சிறப்பு வாய்ந்தவை என்றார்.
இருப்பினும் ஜிஎஸ்டியை அமல்படுத்தியதும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டதும் நாட்டின் வளர்ச்சி விகிதத்தை சரிவடையச் செய்துவிட்டன என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
ஜிஎஸ்டி காங்கிரஸின் திட்டம் தான்:
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தோல்வி குறித்த கேள்விக்கு “மக்களின் கருத்துகளை கேட்டு முடிவெடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். 2012-ல் மக்களிடம் இருந்து விலகிச் சென்றது காங்கிரஸ் கட்சி. இதற்கு காரணமே பிடிவாதம்தான்... மக்களுடனான உரையாடலை காங்கிரஸ் கைவிட்டிருந்தது. இதுவே கடந்த நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு காரணம்” என ராகுல் குறிப்பிட்டார், ஜிஎஸ்டி, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் போன்றவை காங்கிரஸின் திட்டங்கள்தான் எனவும் பேசினார்.
ஸ்டாலினும் அரசியல் வாரிசு தான்:
நீங்கள் அரசியல் வாரிசு தானே என்ற கேள்விக்கு “ஸ்டாலின், அகிலேஷ் யாதவ் ஆகியோரும் அரசியல் வாரிசுகள்தான். என்னை மட்டும் ஏன் கேட்கிறீர்கள்' என்றார்.
மந்தமாக செயல்பாடு?
மந்தமாகவும், தயக்கத்துடனும் செயல்படும் அரசியல்வாதி என்ற விமர்சனம் செய்வது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த ராகுல்காந்தி, பாரதிய ஜனதா கட்சியில் மோடி தலைமையில் செயல்படும் ஆயிரம் பேர், எப்போதும் கணினி முன்பு அமர்ந்திருந்து தமக்கு எதிரான அவதூறுகளை பரப்பி வருவதாகவும் குறிப்பிட்டார்.

2019 ஆம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸின் பிரதமர் வேட்பாளராக களமிறங்க தயாராகிவிட்டதாகவும் ராகுல் காந்தி இக்கருத்தரங்கில் பேசினார்.