புதன், 13 செப்டம்பர், 2017

ஹைட்ரோ கார்பன் சர்வே நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் September 13, 2017

ஹைட்ரோ கார்பன் சர்வே நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்


தமிழகம் உட்பட 24 மாநிலங்களில் ஹைட்ரோ கார்பன் சர்வே நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம் உட்பட 24 மாநிலங்களில் ஹைட்ரோ கார்பன் சர்வே நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஹைட்ரோ கார்பன் சர்வே திட்டத்திற்கு 2 ஆயிரத்து 933 கோடியை ஒதுக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆய்வை ஆயில் இந்தியா நிறுவனமும், ஓஎன்ஜிசியும் இணைந்து நடத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது. 

இதன் மூலம் ஹைட்ரோ கார்பன்களை முழுமையாக அறியவும், கண்டுபிடிக்கவும் உதவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வரும் 2019-20 ஆம் ஆண்டுக்குள் ஹைட்ரோகார்பன் சர்வே பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்பு உள்ள நிலையில் சர்வே நடத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts: