புதன், 13 செப்டம்பர், 2017

நீட் தேர்வுக்கு எதிராக போராடிய திருநங்கைகளை நிர்வாணமாக சோதனை! September 12, 2017


​நீட் தேர்வுக்கு எதிராக போராடிய திருநங்கைகளை நிர்வாணமாக சோதனை!



அனிதாவின் மரணத்தை அடுத்து தமிழகம் முழுவதும் மாணவ போராட்டம் நடைபெற்று வருகிறது. மாணவ அமைப்புகளைத் தாண்டி பல்வேறு தரப்பினரும் நீட் தேர்வு கூடாது என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராகபோராடிய திருநங்கைகளை கைது செய்த காவல்துறையினர் சிறையில் வைத்து அவர்களை நிர்வாணமாக சோதனை நடத்தியது தெரியவந்துள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராக போராடிய திருநங்கைகள் நலச்செயற்பாட்டாளர் கிரேஸ் பானு, திருநங்கை மோனல், சுதர்சன், சாலமன், சிவகுமார் ஆகியோர் கடந்த செப். 7ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுக்கு பிறகாக அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேரத்தில் திருநங்கைகள் கிரேஸ் பானு, மோனல் ஆகியோரை காவல்துறையினர் நிர்வாணமாக சோதித்துள்ளனர். இரண்டு பெண் காவலர்கள் தாங்கள் உண்மையிலேயே திருநங்கைகள் தானா என சோதிக்க நிர்வாண சோதனை நடத்தியதாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள கிரேஸ் பானு தெரிவித்துள்ளார்.

Related Posts: