டெங்கு காய்ச்சல் காரணமாக, சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 3ம் வகுப்பு மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புளியந்தோப்பு, ராஜா தோட்டம் பகுதியில் வசித்து வரும் தணிகை ராஜ்-சுகந்தி தம்பதியின் மகன் சச்சின், அங்குள்ள பள்ளியில் 3ம் வகுப்பு பயின்று வந்தார். சச்சினுக்கு, டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார்.
சிறுவனின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தனியார் மருத்துவமனை தெரிவித்ததை அடுத்து மேல் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சச்சினை சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் சச்சின் உயிரிழந்தார்.
இதேபோல், ராசிபுரம் அருகே மர்ம காய்ச்சலுக்கு ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கொமாரபாளையத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கு ஒன்றரை வயதில் தனுஷ் என்ற குழந்தை இருந்தது.
குழந்தை தனுசுக்கு நேற்று காலை திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் குழந்தை தனுஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. டெங்குவால் தொடர்ந்து ஏற்பட்டு வரும் உயிர் பலியால் தமிழக மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.