திங்கள், 23 அக்டோபர், 2017

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மிரள வைக்கும் வடகொரியா October 23, 2017


செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மிரள வைக்கும் வடகொரியா


செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோபோக்களை ஒரே மாதிரி நடனமாடச் செய்து, கின்னஸ் சாதனை புரிந்துள்ளது வடகொரியா. 

உலகத்தின் எதிர்காலம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை சார்ந்தே இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்நிலையில், தலைநகர் பியோங்யாங்கில், ஒரே நேரத்தில், 1069 ரோபோக்களை ஒரே மாதிரி நடனமாடச் செய்து, வடகொரியா கின்னஸ் சாதனை புரிந்துள்ளது. 


இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சாதனை குறித்து இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், உலக நாடுகள் வடகொரியாவை பார்த்து பயப்படும் நிலையில், தாங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரோபோக்களை பார்த்து அஞ்சுவதாகவும், அவற்றால் மனிதர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகும், என்றும் கூறியுள்ளார். 

கடந்த 2016-ம் ஆண்டு சீனாவில், ஆயிரத்து ஏழு ரோபோக்கள் ஒரே மாதிரி நடனமாடியதே சாதனையாக உள்ளது. தற்போது, அதனை வடகொரியா முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், எதிர்காலத்தில் இத்தகைய ரோபோக்களை, ராணுவம் சார்ந்த பணிகளுக்கு வடகொரியா பயன்படுத்த வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது.