சூழலுக்கு மாசுபாட்டை ஏற்படுத்தாத காலணிகளை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். உலகம் முழுவதிலும் பயன்படுத்தப்படும் மட்காத தன்மையுள்ள பாலி யூரித்தின் காலணிகளின் மிச்சங்கள் நிலத்தினடியில் புதைக்கப்படுவதால் அந்நிலம் எதற்கும் பயன்படாத சூழல் உருவாகிறது.
இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட பாசியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள புதிய காலணி, மக்கள் தொகை நெருக்கம் மிகுந்த இந்தியா, சீனா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
பயன்பாட்டுக்காலம் முடிந்த பிறகு, உரத்துடன் செருப்பை சேர்க்கும் போது அதில் உள்ள நுண்ணுயிர்கள் சிதைத்து அழிக்கும் தன்மையுடன் செருப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த செருப்பு அதன் பயன்பாட்டுக்காலம் முடிந்த பிறகு, மக்கும் திறன் கொண்டவையாக இருக்கும். இதன்மூலம், மக்காத குப்பையாக சேராமல் குப்பையின் அளவு மற்றும் பாதிப்பு குறையும் என நம்புகிறார்கள்.