ஈரோட்டில் கடனை திருப்பிச் செலுத்தாத கூலித் தொழிலாளியின் சிறுநீரகத்தை விற்க கந்து வட்டி கும்பல் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக மனைவி மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியை சேர்ந்த சம்பூரணம் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், தமது கணவர் வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாத நிலையில், கடன் கொடுத்த கந்து வட்டி கும்பல் அவரது சிறுநீரகத்தை விற்கப் போவதாக மிரட்டி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனவே தனது கணவரை உடனடியாக மீட்டு தரவேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து உடனடயாக நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மாவட்டம் முழுவதும் கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தவும் ஆட்சியர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.