காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமது மகள் பிரியங்கா காந்திக்காக ரேபரேலி நாடாளுமன்ற தொகுதியை விட்டுத் தர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகி, சோனியா காந்தி நாடாளுமன்றத்திற்கு செல்வார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரசில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வர சோனியா காந்தி திட்டமிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி விரைவில் பொறுப்பு ஏற்பார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றதும், அவருக்கு உதவியாக பிரியங்காவும் அரசியலில் குதிப்பார் எனக் கூறப்படுகிறது.
பிரியங்கா எம்பி., தேர்தலில் நிற்பதற்கு வசதியாக சோனியாகாந்தி தமது ரேபரேலி தொகுதியை விட்டுக் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், முழு நேர அரசியலில் தொடரும் விதமாக, காங்கிரஸ் கட்சியின் ஆட்சிமன்றக் குழு தலைவராக சோனியா தொடருவார் என காங்கிரஸ் மேலிட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.