காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த மவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த பகத்சிங் என்பவர் சேலம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
ஊத்தங்கரை தாலுக்கா, சிங்காரப்பேட்டை அருகே அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் பகத்சிங். மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த இவர் கடந்த 2002ல் ஊத்தங்கரையில் பொடா வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்தவர். அதன் பிறகு கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்நிலையில் தன்னை போலீசார் என்கவுண்டரில் கொல்ல திட்டமிட்டுள்ளதாக கூறி சேலத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் முன்னிலையில் சரண் அடைந்தார்.