உலக நாடுகளுள் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் சிங்கப்பூர் நாட்டினுடையது என்று சமீபத்தில் வெளியான புள்ளிவிவரத்தின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
உலக நிதி ஆலோசனை அமைப்பான Arton Capital ஆண்டுதோறும் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
தற்போது இந்த அமைப்பு ‘உலகலாவிய சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்2017’ பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் முதல் முறையாக சிங்கப்பூர் முதல் இடத்தை பெற்றுள்ளது.
இதுவரை வெளியிடப்பட்ட உலகலாவிய சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் முதல் 10 இடங்களில் பெரும்பாலும் ஐரோப்பாவைச் சேர்ந்த நாடுகளே இடம்பிடித்து வந்த நிலையில் ஆசியாவைச் சேர்ந்த ஒரு நாடு இப்பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது இதுவே முதல் முறை ஆகும்.
சிங்கப்பூர் நாட்டின் ஆக்கப்பூர்வமான வெளியுறவுக் கொள்கைகளும், உலக நாடுகளுடன் கொண்டுள்ள சுமூகமான உறவுகளுமே இந்நாடு உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் கொண்டதாக மாறியதற்கு காரணம் என்று சிங்கப்பூரில் உள்ள Arton Capital அமைப்பின் நிர்வாக இயக்குனர் பிஃலிப் தெரிவித்துள்ளார்.
இப்பட்டியலில் சிங்கப்பூருக்கு அடுத்ததாக ஜெர்மனி இரண்டாமிடத்திலும், தென் கொரியா மற்றும் ஸ்வீடன் 3வது இடத்திலும் உள்ளது.
கடந்த ஆண்டு 78வது இடத்திலிருந்த இந்தியா 3 இடங்கள் முன்னேறி, 51 தர புள்ளிகளுடன் 75வது இடம் பிடித்துள்ளது. பிரதமர் மோடி உலக நாடுகளுடன் நல்லுறவு கொண்டுள்ளதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இப்பட்டியலில் கடைசியாக 94 இடத்தினை 22 புள்ளிகளுடன் ஆஃப்கானிஸ்தானும், 26 புள்ளிகளுடன் பாகிஸ்தான் மற்றும் ஈராக் 93 இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளன.
29 புள்ளிகள் பெற்று சிரியா 92வது இடத்திலும், 34 புள்ளிகள் பெற்ற சோமாலியா 91வது இடத்தினையும் பிடித்துள்ளன.
சிங்கப்பூர் தனது நிலையை ஓசையில்லாமல் முதல் இடத்திற்கு முன்னேற்றிய நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அந்நாடு இப்பட்டியலில் சரிவைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்பட்டியலில் இடம்பிடித்துள்ள முதல் 10 நாடுகள்.. (அடைப்புக்குறியில் அந்நாடுகளின் தர புள்ளிகள்)
1. சிங்கப்பூர் (159)
2. ஜெர்மனி (158)
3. ஸ்வீடன், தென் கொரியா (157)
4. டென்மார்க், ஃபின்லாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், நார்வே, ஜப்பான், இங்கிலாந்து (156)
5.லக்ஸம்பெர்க், ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம், ஆஸ்திரியா, போர்சுகல் (155)
6. மலேசியா, அயர்லாந்து, கனடா, அமெரிக்கா (154)
7. கிரீஸ், நியூசிலாந்து (153)
8. மால்டா, செக் குடியரசு, ஐஸ்லாந்து (152)
9. ஹங்கேரி (150)
10. ஸ்லோவேனியா, ஸ்லோவேகியா, போலாந்து, லித்யுவேனியா, லாத்வியா (149)