நாகை மாவட்டம் பொறையாரில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையின் பழைய கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில், 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று நள்ளிரவு நாகை மாவட்டம் பொறையாரில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மற்றும் பிற ஊழியர் தூங்கிக்கொண்டு இருந்தனர். அப்பொழுது நள்ளிரவில் திடீரென பணிமனை கட்டடம் இடிந்து விழுந்தது.
ஊழியர்கள் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் கட்டடம் இடிந்து விழுந்ததால் இடிபாடுகளில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இதையடுத்து தகவலறிந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள், மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுனர். படுகாயம் அடைந்த 3 பேர் மீட்கப்பட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து பணிமனை கட்டடம் பழைய கட்டடம் எனவும் அது பழுதடைந்து இருந்ததை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை எனவும் போக்குவரத்து ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த விபத்து குறித்து கருத்து தெரிவித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்கப்படும் எனவும், தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து பணிமனை கட்டடங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பழுதடைந்த கட்டடங்களுக்கு பதில் புதிய கட்டடங்கள் கட்டப்படும் எனவும் தெரிவித்தார்.