ஞாயிறு, 22 அக்டோபர், 2017

டெங்கு: ஒரே நாளில் 6 பேர் பலி! October 22, 2017

டெங்கு: ஒரே நாளில் 5 பேர் பலி!



தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களால் இன்று ஒரே நாளில் இரண்டரை வயது குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். 

காய்ச்சல் காரணமாக தமிழகத்தில் தொடரும் உயிரிழப்புகளால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். தருமபுரி ராஜாதோப்பு பகுதியைச் சேர்ந்த 3 வயது குழந்தை ஹரிஹரசுதன் டெங்கு காய்ச்சலால் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதே போல காய்ச்சலுக்கு ராமநாதபுரம் மாவட்டம் அரியனேந்தலில் இரண்டரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. மேலும், நாகப்பட்டினம் மாவட்டம் நெய்விளக்கு, மதுரை, திருவாரூர் மாவட்டம் கீழ்வேலூர் ஆகிய பகுதிகளிலும் தலா ஒருவர் காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர். 

Related Posts: