திங்கள், 2 அக்டோபர், 2017

அமெரிக்காவில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 58 பேர் பலி! October 02, 2017

அமெரிக்காவில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பலி!


அமெரிக்காவில் ஓட்டலுக்குள் புகுந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில் 58 பேர் உயிரிழந்தனர். 515 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள கேசினோ ஓட்டலில் நேற்று இரவு இசைக்கச்சேரி நடைபெற்றது. கச்சேரியை பார்க்க ஏராளமான வாடிக்கையாளர்கள் திரண்டிருந்தனர்.

அனைவரும் கச்சேரியை ரசித்துக்கொண்டிருந்த வேளையில், கூட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுத் தள்ளினார்.



துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதும் அங்கு கூடியிருந்தவர்கள நாலாபுறமும் சிதறி ஓடினர்.  கச்சேரியும் உடனடியாக நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் 50 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 400க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தப்பி ஓடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். இதேபோல் வேறு சில இடங்களிலும் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


துப்பாக்கி சூடு குறித்த தகவல் கிடைத்ததும், அங்குள்ள விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. விமானங்கள் தரையிறங்குவதும், புறப்பட்டுச் செல்வதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

துப்பாக்கிச்சூடு நடத்தியவருடன் வந்த ஆசிய பெண்ணான மரிலோ டன்லியை போலிசார் தேடி வருகின்றனர். இதுவே அமெரிக்காவில் நடத்தப்பட்ட மிகப்பெரிய துப்பாக்கிச்சூடு சம்பவம் என கூறப்படுகிறது.

தற்கொலை:

இந்நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக அமெரிக்க போலீஸ் தெரிவித்துள்ளது.