திங்கள், 2 அக்டோபர், 2017

காந்தி ஜெயந்தியன்றும் படுஜோராக நடக்கும் மதுவிற்பனை! October 02, 2017



காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வரின் மாவட்டமான சேலம் அருகே, கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதாகவும், மாமூல் வாங்கிக் கொண்டு, போலீஸார் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கெங்கவல்லி, கடம்பூர் உள்ளிட்ட பகுதிகளில், காந்தி ஜெயந்தியான இன்று, மறைமுகமாக மது விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. 

குவாட்டர் மது பாட்டில் 150 ரூபாய்க்கும், பீர் பாட்டில்கள் 180 ரூபாய்க்கும் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. 

இதற்கு உடந்தையாக இருக்கும் போலீஸார், மாமூல் வாங்கிக் கொண்டு, கண்டும் காணாமல் இருப்பதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். 

காந்தி ஜெயந்தியன்று மது விற்பவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், பொதுக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.