செவ்வாய், 3 அக்டோபர், 2017

​அமெரிக்க வரலாற்றில் நிகழ்ந்த மோசமான துப்பாக்கிச் சூடுகள்! October 03, 2017

​அமெரிக்க வரலாற்றில் நிகழ்ந்த மோசமான துப்பாக்கிச் சூடுகள்!



அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த மோசமான துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 58 பேர் பலியாகியுள்ளனர். துப்பாக்கி கலாச்சாரமும், தீவிரவாத தாக்குதலும் அதிகரித்து வரும் அமெரிக்காவில் இதுவரை நடந்த மோசமான தாக்குதல்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1999ம் ஆண்டு ஏப்ரல் 20ந்தேதி  கொலராடோ மாகணத்தில் உள்ள லிட்டில்டோன் நகரில் உள்ள பள்ளிக் கூடத்தில் இரண்டு இளைஞர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவர் பலியானார்.

2007ம் ஆண்டு அமெரிக்காவின் விர்ஜினியா மாகணத்தின் பளாக்ஸ்பர்க் நகரில் உள்ள விர்ஜினியா பல்கலைகழகத்தில் புகுந்து 32 பேரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று அமெரிக்க மக்களை அதிர்ச்சி அடையவைத்தார். 

2012ம் ஆண்டு டிசம்பர் 14ந்தேதி கோனக்டிக்கட் மாகாணத்தில் உள்ள ஷான்டி ஹூக்கில் துவக்கப்பள்ளி ஒன்றில் தனது தாய் மற்றும் 20 குழந்தைகள் உள்பட 26 பேரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.

2015ம் ஆண்டு டிசம்பர் 2ந்தேதி கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள San Bernardino நகரில் விடுமுறைதின விருந்தின்போது கணவன் மனைவி சேர்ந்து 14 பேரை சுட்டுக்கொன்றனர்.

2016ம் ஆண்டு ஜூன் 12ந் தேதி ப்ளேரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லாண்டோ நகரில் இரவு விடுதியில் தனி நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டனர்.
2017ம் ஆண்டு அக்டோபர் 1ந்தேதி இரவு லாஸ்வேகாசில் 64 வயது முதியவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 58 பேர் பலியாகியுள்ளனர்.